எங்களைப் பற்றி
Yahweh Graced என்பது தமிழ்த் திருமறையை அதன் எபிரேய மொழிக்கு உண்மையாகப் படிக்கவும் பாடவும் உதவும் பணி.
யாஹ்வே என்னும் பெயர்
எபிரேயத் திருமறையில் ஏறத்தாழ 6,800 முறை வரும் யாஹ்வே என்னும் பெயர், தமிழ் மொழிபெயர்ப்புகளில் ஒரு பொதுச்சொல்லால் மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பெயரை மீண்டும் அதன் இடத்தில் வைக்கிறோம்.
எபிரேயப் பொருளுக்கு உண்மையாக
ஒவ்வொரு சொல்லும் எபிரேய மொழியில் என்ன பொருள் தருகிறது என்று ஆராய்ந்து, தமிழ் மொழிபெயர்ப்பில் பொருள் தவறிய இடங்களை விளக்குகிறோம்.
தூய தமிழ்
வடமொழிச் சொற்களைத் தவிர்த்து, தமிழின் சொற்களிலேயே எழுதுகிறோம், பாடுகிறோம்.