Tamil
யாஹ்வே, எம் ஆண்டவரே
Yahweh, Our Lord
திருப்பாடல்கள் 8
எபிரேய மொழியிலிருந்து நேராக, தூய தமிழில் அமைந்த பாடல்.
இசைத் தலைவருக்கு; கித்தீத்தில்; தாவீதின் இசைப்பா. (8:1)
உம் வானங்களை, உம் விரல்களின் படைப்புகளை, நீர் நிறுவிய நிலவையும் விண்மீன்களையும் காணும்போது — மாந்தன் என்ன, நீர் அவனை நினைக்க?
எலோஹிமைவிடச் சற்றே அவனைக் குறைத்தீர்; மாட்சியாலும் எழிலாலும் அவனுக்கு முடிசூட்டினீர்.
யாஹ்வே, எம் ஆண்டவரே, நிலமெங்கும் உம் பெயர் எவ்வளவு மேன்மையானது!
பாடல் வரிகள்
தொடக்கம் (8:1)
இசைத் தலைவருக்கு... கித்தீத்தில்... தாவீதின் இசைப்பா.
(ம்ம்... ம்ம்...)
(ஹா… ஹா…)
எடுப்பு (8:2(1))
யாஹ்வே..! எம் ஆண்டவரே..!
நிலமெங்கும் உம் பெயர் எவ்வளவு மேன்மையானது!
உம் பொலிவு வானங்களுக்கு மேல் பாடப்படும்
யாஹ்வே..! எம் ஆண்டவரே..!
8:3(2)
உம் எதிரிகளை முன்னிட்டு
பகைவனை, பழிவாங்குவோனை ஓயச் செய்ய
மழலைகளின், குழந்தைகளின் வாயினின்று
திண்மையை நாட்டினீர் (நாட்டினீர்!)
8:4(3)–8:5(4)
நீர் நிறுவிய நிலவையும் விண்மீன்களையும்,
உம் வானங்கள், (உம் வானங்கள்) உம் விரல்களின் படைப்புகளை நான் காணும்போது,
மாந்தன் என்ன, நீர் அவனை நினைக்க?
ஆடவன் மைந்தன் என்ன, நீர் அவனைப் பேண?
எடுப்பு (8:2(1))
யாஹ்வே..! (யாஹ்வே..!) எம் ஆண்டவரே..!
நிலமெங்கும் உம் பெயர் எவ்வளவு மேன்மையானது!
உம் பொலிவு வானங்களுக்கு மேல் பாடப்படும்
யாஹ்வே..! (யாஹ்வே..!) எம் ஆண்டவரே..!
8:6(5)–8:7(6)
எலோஹிமைவிடச் சற்றே அவனைக் குறைத்தீர்
மாட்சியாலும் எழிலாலும் அவனுக்கு முடிசூட்டினீர்
உம் கைகளின் படைப்புகளை அவன் ஆளச் செய்தீர்
யாவையும் அவன் கால்களின் கீழ் வைத்தீர்
8:8(7)–8:9(8)
மந்தைகள் மாடுகள் யாவையும் (அவன் கீழ்!)
மேலும், புலத்து விலங்குகளையும் (அவன் கீழ்!)
வானங்களின் பறவைகளையும் கடல் மீன்களையும் (அவன் கீழ்!)
கடல்களின் நெறிகளில் கடப்பதையும் (அவன் கீழ்!)
8:7(6), 8:5(4)
அவன் கால்களின் கீழ் வைத்தீர்!
மாந்தன் என்ன, நீர் அவனை நினைக்க..?
இறுதி எடுப்பு (8:10(9))
யாஹ்வே..! (யாஹ்வே..!) எம் ஆண்டவரே..!
நிலமெங்கும் உம் பெயர் எவ்வளவு மேன்மையானது!
யாஹ்வே..! (யாஹ்வே..!) எம் ஆண்டவரே..!
நிலமெங்கும் உம் பெயர் எவ்வளவு மேன்மையானது!
யாஹ்வே..! (யாஹ்வே..!) எம் ஆண்டவரே..!
நிலமெங்கும் உம் பெயர் எவ்வளவு மேன்மையானது!
யாஹ்வே..! (யாஹ்வே..!) எம் ஆண்டவரே..!
நிலமெங்கும் உம் பெயர் எவ்வளவு மேன்மையானது!
நிறைவு
(ம்ம்... ம்ம்...)
குறிப்பு
எலோஹிம் — இச்சொல் கடவுள் குழுவையோ, கடவுளையோ அல்லது வானங்களில் உள்ளோரையோ குறிக்கும்.
பழைய கிரேக்க மொழிபெயர்ப்பாளர்கள் இச்சொல்லை "ஏவலர்" என்று மொழிபெயர்த்தனர்.
எங்கள் கருத்தைத் திணிக்காமல், எபிரேய உரைக்கு உண்மையாக இருப்பதற்காக, அதிலுள்ள சொல்லையே வைத்துள்ளோம்.